கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
1 ஆம் தேதி முதல்.. Good morning-க்கு வரி.?! வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் உண்மை.!

சமீப காலமாக whatsapp தளத்தில் ஒரு ஆடியோ ஒன்று மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த ஆடியோவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குட் மார்னிங் மெசேஜை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தால் அடுத்த முறை நாம் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும்போது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆடியோவை கேட்ட பலரும் இதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
இந்த ஆடியோ பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் உண்மையில் இது ஒரு வதந்தி. அது மட்டும் அல்லாமல் இந்த செய்தி இப்போது வெளிவந்தது இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, 'நவ் பாரத் டைம்ஸ்' எனும் நாளிதழ் ஒன்றில் வேடிக்கையாக வெளியான ஒரு செய்தியாகும்.
அந்த செய்திக்கு அடியில், "யாரும் கவலைப்படாதீர்கள்.. இது ஒரு ஹோலி." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாளிதழை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.