இந்தியா டெக்னாலஜி

தினக்கூலியாக இருந்த 4 குழந்தைகளின் தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்.! அவர் போட்ட ஒரே ஒரு வீடியோ.! தலைகீழாக மாறிய வாழ்க்கை.!

Summary:

தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். யூடியூப் தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும்.

மேலும், யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும். இந்தநிலையில், ஒடிசாவை சேர்ந்த தினக்கூலி ஒருவர் அவரது யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தினக்கூலி வேலை செய்து எளிமையான வாழ்க்கையை ஓட்டிவந்த ஐசக், கடந்தாண்டு தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். இதையடுத்து கடந்தாண்டு ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார்.

அவரது செல்போனில் முதன்முறையாக சைடிஷ் எதுவும் இல்லாமல் தான் அரிசி சாதம் சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து அவரது  யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. இதன் பின்னர் பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களில் சமையல், கலாச்சாரம் போன்றவைகளை வீடியோவாக எடுத்து அவரது  யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அவர் போடும் அனைத்து வீடியோக்களும் ஹிட் அடித்தது.

இதனையடுத்து அவர் போடும் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வர தொடங்கியது. இதுகுறித்து ஐசக் கூறுகையில், நான் ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன், என் சமுதாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட தொடங்கி இப்போது என் சேனல் பிரபலமாகி உள்ளது. எனது சேனலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.


Advertisement