அதீத வளர்ச்சி காணும் ஜியோ - ஒரு மாதத்தில் மட்டும் இதனை லச்சம் வாடிக்கையாளர்களா!

அதீத வளர்ச்சி காணும் ஜியோ - ஒரு மாதத்தில் மட்டும் இதனை லச்சம் வாடிக்கையாளர்களா!


jio-got-82-laksh-views-in-june-month

2016ல் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் காலடி பதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அதீத வளர்ச்சி கண்டு வருகிறது.மேலும் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு துறையின் வரலாற்றை மாற்றி அமைத்தது என்றே கூறலாம்.

ஜியோ நிறுவனம் தனது இலவச கால்கள், இன்டர்நெட் போன்ற அதிரடி சலுகைகளை வழங்கி, குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றதுள்ளது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோவை சமாளிக்க முடியாமல் தங்களது கடையை இழுத்து மூடி விட்டன.

jio neruvanam

ஆனால் தற்போது, ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஜியோவை சமாளித்து காலத்தை தள்ளிவருகின்றன.இலவச கால்கள், இன்டர்நெட் வசதிகள் மூலம் நாளுக்கு நாள் ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 82 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜியோவின் இந்த அதீத வளர்ச்சியால் மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.