"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஃபேஸ்புக் தேவை இல்லை; உங்கள் மொபைலே போதும்! தகவல்கள் அனைத்தும் காலி
சமீபத்தில் ஃபேஸ்புக் மூலம் அனைவரின் தகவல்களும் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நீங்கள் ஃபேஸ்புக் உபயோகிக்காவிட்டாலும் உங்கள் ஆண்டராய்டு மொபைல் மூலமே தகவல்கள் திருடப்படுகிறதாம்.
தனி நபரின் தகவல்களை ஆராய்தல், அதனை இணையத்தில் கசியவிடுவது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இதுகுறித்த விசாரணையில் கூட பயனாளர்களின் தகவல்கள் கசிந்ததை ஃபேஸ்புக் நிறுவனமே ஒப்புக்கொண்டது. இதனால் ஃபேஸ்புக் பயனாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த அச்சம் வெறும் ஃபேஸ்புக் ஆப் பயனாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஆண்டராய்டு மொபைல் பயனாளர்களுக்கும் தான் என Privacy International என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆய்வில் ஃபேஸ்புக் தனது பயனாளர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் என அனைவரையுமே கண்கானித்து வருவதாகக் கூறுகிறது.
ஆண்ட்ராய்டு மொபைல்களில் நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ஆப்களின் மூலமாகவே அனைத்துத் தகவல்களும் ஃபேஸ்புக்-க்குப் பரிமாறுவதாகக் கூறுகிறது ப்ரைவஸி இண்டெர்நேஷனல் நிறுவனம்.
மேலும் சுமார் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் கண்காணிப்பில் தான் உள்ளது என கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனமும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எனவே இந்த குற்றச்சாட்டுகளின் மூலம் பேஸ்புக் என்ற வார்த்தையை இதுவரை கேள்விப்பட்டிராத மொபைல் பயன்பாட்டாளர்களை கூட பேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது எனவே. நான் பேஸ்புக் பயன்படுத்தவில்லை, எனக்கு எந்த பயமும் இல்லை என யாராலும் சொல்ல முடியாது போல. நமது தகவல்கள் வேறு யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் மொபைல் பயன்படுத்துவதையே நிறுத்திக்கொள்ளவேண்டும் வேண்டிய நிலைமை வந்துவிட்டது.