உலகம் டெக்னாலஜி

கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2400 ஆண்டுகள் பழமையான உடைந்த கப்பலின் பாகங்கள்!

Summary:

found 2400 year old ship parts in black sea

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியில் 2400 ஆண்டுகள் பழமையான கப்பலின் உதிரி பாகங்கள் கடலில் அடிப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2400 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்திய வணிக கப்பல் ஒன்றின் உதிரி பாகங்கள் கருங்கடலின் தரைப்பகுதியில் இருந்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 17வது நூற்றாண்டில் ரோமானிய கப்பல்களில் நடைபெற்ற கொஸாக் தாக்குதலில் தகர்க்கப்பட்ட 60 கப்பல்களை பற்றிய ஆராய்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் இந்த பழமையான கப்பலின் உதிரி பாகங்கள் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

World's Oldest Known Shipwreck Found Intact At Bottom Of Black Sea

3 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் நீருக்கு அடியில் சென்று படமெடுக்கும் துல்லியமான கேமராவைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை அவர்கள் நடத்தியுள்ளனர். கிரேக்கர்கள் பயன்படுத்திய அந்த பழமையான கப்பலின் உதிரி பாகத்தில் கப்பல் பயன்படுத்தப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் BC 400 என்று என்ற ஆண்டு குறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் கருங்கடல் ஆனது கிரேக்கர்களின் முக்கிய வணிக தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 6500 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கப்பலின் உறுதி பாகங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும் தன்மையை பெற்று உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலுக்கு அடிப்பகுதியில் ஆக்சிஜன் இல்லாததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். 

அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் கூறுகையில் "இந்த நவீன உலகத்தில் தயாரிக்கப்படும் கப்பல்கள் கடலின் அடிப்பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று அழியாமல் இருப்பது மிகவும் அரிதான விஷயம். இந்தக் கண்டுபிடிப்பானது புதிய கப்பல்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement