இனி வாட்ஸப்பில் அதிக பார்வேர்ட் மெசேஜ் அனுப்ப வருகிறது தடை!

Forward limit link detection new whatsapp update 2019


Forward limit link detection new whatsapp update 2019

உடனுக்குடன் செய்திகள், புகைப்படங்கள், விடீயோக்களை அனுப்பிக்கொள்ள வாட்சப் செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன்மூலம் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. செய்தி அனுப்புவதற்காகவே ரீசார்ஜ் செய்த காலம் மாறி, இன்று SMS , போன் கால் என அனைத்தையும் இலவசமாக மாற்றிவிட்டது வளர்ந்துவரும் டெக்னாலஜி.

இன்று சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் எளிதான செயலிதான் இந்த வாட்சப். இதனை மேலும் எளிதாக வாட்சாப் நிறுவனம் அவ்வப்போது புது புது அப்டேட்டை வெளியிடுகிறது. அந்தவகையில் வரும் 2019 புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு விதமான புது அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது வாட்சப் நிறுவனம். என்ன என்ன அப்டேட்டுனு பாக்கலாம் வாங்க.

Whatsapp updates

1 . Suspicious link detection
பொதுவாக ஏதாவது ஒரு இணையதள செய்தியை வாட்ஸப்பில் அதிகம்பேர் பார்வேர்ட் செய்வது உண்டு. சில சமயங்களில் அந்த இணையதளம் ஆபத்தானதாக இருக்கலாம், அல்லது தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒரு வழியாக இருக்கலாம். மேலும் SPAM என்று சொல்ல கூடிய தொந்தரவு தரக்கூடிய செய்திகளாக இருக்கலாம். இதனை முறை படுத்த வாட்சப் புது வழி ஒன்றை வழங்க இருக்கிறது. இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்ல கூடிய அந்த செய்தியானது சிவப்பு வண்ணத்தில் உங்களுக்கு காட்டப்படும். நீங்கள் விரும்பினால் அந்த செய்தியை திறக்கலாம் அல்லது டெலிட் செய்யலாம்.

2 . Forward Limit 
சில சமயங்களில் வாட்ஸப்பில் அதிகம் பகிரப்படும் செய்திகளால் தேவை இல்லாத குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. இதுபோன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகமானதை அடுத்து இனி ஒரு செய்தியை எந்த அளவிற்கு பார்வேர்ட் செய்ய முடியும் என்ற கணக்கை வாட்சப் நிர்ணயிக்க உள்ளது.

Whatsapp updates

3 WhatsApp stickers 
பொதுவாக வாட்ஸப்பில் செய்திகள் பகிரும் போது செய்திகளை விட Emoji என அழைக்கப்படும் சிறு சிறு உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியிடுகள் தான் அதிகம் பயன்படுத்தப்படும். அதே போன்று பண்டிகை காலங்கள் இதுபோன்ற நாட்களில் அதிகப்படியான ஸ்டிக்கர்ஸ் அனுப்பப்படும். தற்போது வாட்ஸப்பிடம் அதிகப்படியான ஸ்டிக்கர்ஸ் இல்லை. இந்த புது அப்டேட் மூலம் யார் வேண்டுமானாலும் வாட்சப் ஸ்டிக்கர்ஸ் செய்து அதனை வாட்ஸப்பில் பகிர முடியும்.

4 . Add Participants in Group calling 
அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்களுடன் வீடியோ கால் செய்யும் வசதியினை வாட்ஸாப்ப் வழங்கி வருகிறது. அதில் நான்கு நபர்கள் மட்டுமே பங்குபெற முடியும். தற்போது மேலும் நபர்களை சேர்க்க என்று ஒரு புதிய பட்டன் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. அந்த பட்டன் மூலம் மேலும் மூன்று நபர்களை வீடியோ காலில் உங்களால் இணைக்க முடியும்.