YouTuber-களால் பிரபலப்படுத்தப்பட்ட சேலம் BARBIE QUEEN ரெஸ்டாரண்டில் அழுகிய மட்டன், சிக்கன் இறைச்சிகள் பறிமுதல்.!

YouTuber-களால் பிரபலப்படுத்தப்பட்ட சேலம் BARBIE QUEEN ரெஸ்டாரண்டில் அழுகிய மட்டன், சிக்கன் இறைச்சிகள் பறிமுதல்.!


youtubers-salem-barbie-queen-restaurant-un-hygiene-food

மட்டமான உணவுகளை தயாரித்து கஸ்டமருக்கு வழங்கிய உணவகம், யூடியூபர்களால் ஆகா ஓகோவென புகழப்பட்ட சம்பவம் பொய்த்து ஒரேயொரு செய்தியால் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த யூடியூபர்களால் மிகச் சிறந்த சேலம் ஓட்டல் என்று புகழப்பட்ட பார்பிக்யூ ஹோட்டல், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று, இந்த ஓட்டலுக்கு சென்ற சபரி என்ற வாடிக்கையாளர் மட்டன் கிரேவி, மட்டன் பிரியாணி போன்றவற்றை வாங்கிச் சென்றுள்ளார். 

வீட்டிற்கு சென்று பார்க்கையில் மட்டன் கிரேவி வீணாகி துர்நாற்றம் வீசிய நிலையில், அந்த உணவை உணவகத்திற்கு எடுத்து வந்த சபரி ஊழியரிடம் கொடுத்துள்ளார். ஊழியரும் உணவு கெட்டுப் போய் இருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில், மேலாளரிடம் அதனை காட்டிய போது அவர் மெத்தனமாக பதில் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சபரி உணவக ஊழியர்கள் மற்றும் மேலாளருடன் வாக்குவாதம் செய்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்கு விரைந்து ஆய்வு செய்த அதிகாரிகள், அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய 5 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை கைப்பற்றினர். 

மேலும், வீணான பிரியாணி, சவர்மா, கிரில் சிக்கன் போன்றவற்றையும் கைப்பற்றினர். இதில், பல மசாலா பொருட்கள் காலாவது தேதி இல்லாமல் இருந்த நிலையில் அதனையும் பறிமுதல் செய்துள்ளனர்.