செல்ஃபி மோகத்தால் விபரீதம்: செம்பரம்பாக்கம் ஏரியில் முழ்கி பலியான இளைஞர்கள்..!

செல்ஃபி மோகத்தால் விபரீதம்: செம்பரம்பாக்கம் ஏரியில் முழ்கி பலியான இளைஞர்கள்..!Youth drowned in Sembarambakkam lake due to selfie craze

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் விக்னேஷ் (20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16). இவர், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு  படித்து வந்தார். இவர்கள் இருவரும் இணை ப்ரியாத நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்த பின்பு, அந்த இயற்கை சூழலை ரசித்த அவர்கள் ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த சிறிய மதகில் ஏறி நின்றபடி தங்களது செல்ஃபோனில் 'செல்பி' எடுத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் தவறி விழுந்துள்ளனர். அவர்கள் இருவருக்குமே நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், 2 பேரையும் காப்பாற்ற முய₹சி செய்துள்ளனர். அவர்களார் காப்பாற்ற முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் நண்பர்களான இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாகஉயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்து ஏரிக்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஏரியில் விழுந்து பலியான நண்பர்களின் உடல்களை  மீட்டனர். இதனையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.