காதலிக்க மறுத்த 10 ஆம் வகுப்பு மாணவி.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

காதலிக்க மறுத்த 10 ஆம் வகுப்பு மாணவி.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!


youth-arrested-for-threatening-to-throw-acid-in-10th-class girl

தன்னை காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்து உள்ள அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (24).இவர் வாடகை கார் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் அதே பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

Throw acid

அடுமட்டுமின்றி அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி செந்தரவு செய்து வந்துள்ளார் நாகராஜ். ஆனால் அதற்கு மாணவி மறுத்து வந்த நிலையில் நாகராஜ் மாணவியிடம் தன்னை காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.