தமிழகம்

இந்த காலத்தில் இப்படியா.! முகம் தெரியாத இன்ஸ்டாகிராம் காதலிக்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!

Summary:

Youngman suicide for instagram love

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை  சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் தனியார் வங்கிகளில் ஏ.டிஎம்.களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்துள்ளார். இவர், கடந்த இருமாதங்களுக்கு முன், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கொரோனோவால்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த  நிலையில் ஆனந்தகுமார், தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்துள்ளார். அப்பொழுது அவர் பொழுதுபோக்கிற்காக  இன்ஸ்டாகிராம்  பார்த்துவந்துள்ளார். 

 இந்நிலையில்  அவருக்கு முகம் தெரியாத பெண் பெயரிலான ஐடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  மேலும் தன்னிடம் பேசியது உண்மையில்  பெண்தானா? என்பதுகூட தெரியாமல் ஆனந்தகுமார் அவரை உருகிஉருகி காதலித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தகுமாரை நிராகரித்து அந்த பெண் ஐடி நபர் ஆனந்தகுமாரின் இன்ஸ்டாகிராம் கணக்கை பிளாக் செய்துள்ளார். இதனால், அவர்  மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும் அவர் சோர்வாக இருப்பதை பார்த்து அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். 

இந்நிலையில் ஆனந்தகுமார் நேற்று உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைகண்ட உறவினர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 பின்னர் ஆனந்தகுமாரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த நபர் அனுப்பிய மெசேஜ், வீடியோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முகம் தெரியாத அந்த நபரின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக ஆனந்தகுமார் தடயங்கள் அனைத்தையும் அழித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement