தமிழகம் டெக்னாலஜி

தற்கொலை செய்துகொண்ட திருமண மாப்பிள்ளை.! கடைசியாக என்ன வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் தெரியுமா?

Summary:

youngman post last whatsapp status before dead

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்த வருபவர் மன்சூர். இவர் அதே பகுதியில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த மாதம், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலை வெகுநேரமாகியும் மன்சூரின் அறை கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு மன்சூர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இவ்வாறு மன்சூர் இறந்து கிடந்ததைப் கண்டு அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மன்சூரின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையில் மன்சூர் இறப்பதற்கு முன், செல்போனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “என்ன வாழ்க்கைடா இது., காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டேன் என்கிறாங்க, வாழ்க்கைக்கு குட்பை” எனப் பதிவிட்டிருந்தார்.


Advertisement