என் காதலியை கொன்னுட்டாங்க! கதறிவாறு இளைஞர் பரபரப்பு புகார்! இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்!

என் காதலியை கொன்னுட்டாங்க! கதறிவாறு இளைஞர் பரபரப்பு புகார்! இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்!


youngman-complaint-on-lover-parents-in-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் விவேக். இவர் கடந்த 8 வருடங்களாக, திருவரங்குளத்தை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் தற்போது சாவித்திரி புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் விவேக் வேறு சமூகத்தினரை சேர்ந்தவர் என்பதால் சாவித்திரியின் பெற்றோர்கள் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவசரஅவசரமாக திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி மற்றும் விவேக் இருவரும் தனது நண்பர்களின் உதவியுடன் வாடகை காரில் புதுக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்றுள்ளனர். 

Murder

அப்பொழுது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபின், இருவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விவேக்கிற்கு இன்னும் 21 வயது பூர்த்தியாகவில்லை நான்கு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் சாவித்திரி நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், என்னை கொன்று விடுவார்கள் என அழுதநிலையில் போலீசார் சாவித்திரியை அடித்து துன்புறுத்த கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உறவினர்கள் சடலத்தை இரவோடு இரவாக எரித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நிலையில் அதிர்ச்சியடைந்த விவேக், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அதில் சாவித்திரி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை அவரது மரணத்தில் மர்மம் உள்ளது எனவும், அவர் நிச்சயம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவும்  குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் இது ஆணவ கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்தில் சாவித்ரியின் தாய் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.