காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிய பெற்றோர்! துக்கத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!youngman commits suicide for wife separated by parents

நாகப்பட்டினம் அருகே தாலி கட்டிய பிறகு காதலியை காவல் நிலையத்தில் வைத்து பிரித்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். 26 வயது நிரம்பிய இவர் அதே பகுதியை சேர்ந்த சிவ நந்தினி என்ற இளம்பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அரவிந்த் குமார் மற்றும் சிவ நந்தினி ஆகிய இருவரும் வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மகள் சிவ நந்தினியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தநிலையில், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் நேற்றுமுன்தினம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.

suicide

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் பெண் வீட்டார்கள் சிவ நந்தினியின்  தாலியை கழற்றி காவல் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவநந்தினியை மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் காதலியை பிரிந்த துக்கத்தில் இருந்த அரவிந்த்குமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து அரவிந்த் குமாரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.