தமிழகம் விளையாட்டு

மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த பந்து! கிரிக்கெட் போட்டியில் கண்ணிமைக்கும் நொடியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Summary:

youngboy dead by attacking cricket ball

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகேயுள்ள அகரம் என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதி மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அணிகளாக பிரிந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். 

 இதில் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் களமிறங்கி விளையாடியது. அப்பொழுது சூனாம்பேடு அணியை சேர்ந்த சுனில் என்பவர் பேட்டிங் செய்துள்ளார்.அவருக்கு எதிர் அணியை சேர்ந்த கமலேஷ்  என்பவர் பந்து வீசியுள்ளார். இந்நிலையில் வேகமாக கமலேஷ் வீசிய பந்து நேராக சுனிலின் நெஞ்சின் மீது பாய்ந்தது.இதில் சுனில் மார்பை பிடித்துக் கொண்டு அதே  இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

 இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றியுள்ள இளைஞர்கள் உடனே சுனிலை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுனில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுனிலுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல் பிரச்சினைகள் உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement