தமிழகம்

உன் தங்கையை என் தம்பிக்கு திருமணம் செய்து வை.! அழுது கொண்டே வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய இளம் மனைவி.! அதிர்ச்சி பின்னணி.!

Summary:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த அமல்தாஸ் என்பவரின் மகள் சுஜா என்ற 30 வயத

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த அமல்தாஸ் என்பவரின் மகள் சுஜா என்ற 30 வயது பெண்ணிற்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிப்பாறை பட்டியைச் சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது.

இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெண் கேட்டுள்ளனர். வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு திருமணம் செய்து வை என அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து சுஜாவை அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அமல்தாஸ் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுஜா இறப்பதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சித்ரவதை தான் காரணம் என்றும், தனது குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார்.


Advertisement