தமிழகம்

எனக்கு பிரச்சனை இருக்கு.. திருமணம் வேண்டாம்.! மகள் சொல்லியும் கேட்காமல் திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்.! மகள் எடுத்த பகீர் முடிவு...!

Summary:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்பவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் சுடலையாண்டியின் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகிற 10-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டியும், அவரது மனைவியும் எழுந்து அவர்களது டீ கடைக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் சுடலையாண்டியின் மூத்த மகள் எழுந்து சமையலறை அருகே வந்துள்ளார். அப்போது அவரின் தங்கை விஜயலட்சுமி கழுத்தில் சேலையால் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப்பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த பெற்றோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம் எனக்கு காது சரிவர கேட்காது, இந்த பிரச்சினை இருப்பதால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இந்தநிலையில், விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


Advertisement