பிரசவத்தின் போது இளம் பெண் பலி.. மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என்று உறவினர்கள் போராட்டம்..!

பிரசவத்தின் போது இளம் பெண் பலி.. மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என்று உறவினர்கள் போராட்டம்..!



young-woman-died-during-childbirth

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் நாகக்கனி. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  நாகக்கனியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கமுதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளனர். மேலும் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாகக்கனிக்கு மருத்துவர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.

women died

இந்நிலையில் நாகக்கனிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் பின்பு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நாகக்கனி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதனையடுத்த நாகக்கனி உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று நாகக்கனியின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகக்கனியின் குடும்பத்தாரை சமாதானம் செய்தும் இச்சம்பவம்  குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது