பெற்றோர்களே உஷார்... இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்...Young man trying to rape by small girl

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றதை அரிந்து கொண்டு செல்வராஜ் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு சிறுமி செல்வராஜை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி சென்றுள்ளார். பின்னர் நடந்தவற்றை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

young man

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவை அடுத்து செல்வராஜை சிறையில் அடைத்தனர்.