தமிழகம்

இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன்.! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.!

Summary:

இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்திருவேன்.! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய முஹமது கான்.!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி களத்தூர் கிராமத்தில் இந்து கோவில் தேரை கொளுத்த வந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்துள்ளனர் பொதுமக்கள்.

வி.களத்தூர் கிராமத்தில் நேற்றுவ காலை சுமார் 7 மணி அளவில் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த காதர் கான் என்பவரின் மகன் முஹமது கான் என்பவர் இந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற போது அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்துள்ளனர்.

ஊர் பொதுமக்கள் முன்பு அந்த வாலிபர் பேசியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வாலிபரிடம் ஏன் இவ்வாறு செய்ய முயன்றாய் என கேட்டபோது, கடந்த சில வருடங்களாக இந்த தேர்கள் பூட்டி கிடக்கின்றன. அதனால் இதன் உள்ளே என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ள தீ வைக்க வந்தேன் என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் அந்த நபரிடம் இந்த தீ வைப்புக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என கேட்டபோது, அதெல்லாம் ஒன்றும் இல்லை.. நான்தான் கொழுத்த வந்தேன். இப்ப விட்டாலும் கொளுத்துவேன் என அந்த வாலிபர் திமிராக பேசியது ஊர் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இவை அனைத்தும், செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து வி.களத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement