2 வருட காதல்.. 2 மாத திருமண வாழ்க்கை.. ஆடிக்கு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. கடைசியில் நிகழ்ந்த சோகம்.!

2 வருட காதல்.. 2 மாத திருமண வாழ்க்கை.. ஆடிக்கு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. கடைசியில் நிகழ்ந்த சோகம்.!


young-man-suicide-in-chennai-chrompet-police-investigat

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்குமார் ஈசா பல்லாவரம் பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பிரவீன்குமார் மற்றும் தீபிகா ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பிறகு போலீசாரிடம் தஞ்சம் புகுந்ததை அடுத்து போலீசார் இரு குடும்பத்தாரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். 

young man

இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் தீபிகா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்து 10 நாட்களே ஆன நிலையில் கடந்த 30 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து தீபிகாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அதன்பிறகு போலீசார் பிரவீன்குமாரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரவீன், தீபிகா தன் மீது மிகுந்த அன்பாக இருந்ததாகவும், சம்பவத்தன்று திபீகா கால் செய்த போது தான் எடுக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து இன்று காலை விசாரணைக்காக மீண்டும் போலீசார் பிரவீனை அழைத்துள்ளனர். ஆனால் மனைவி இறந்த சோகத்தில் இருந்த பிரவீன் நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.