ஹவுஸ் ஓனரிடம் அக்கா-தங்கை என கூறி உல்லாச வாழ்க்கை.! அடுத்து நடந்த பகீர் சம்பவம்.!young-man-murdered-young-women

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற இளம்பெண்ணிற்கும் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரும் தஞ்சாவூரில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.

இதனையடுத்து சென்னைக்கு வந்த இருவரும், அக்கா- தம்பி என கூறி சிந்தாதிரிப்பேட்டை  பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்தநிலையில், சந்தோஷ் குமார் தினந்தோறும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். சந்தோஷ் குமாரின் இந்த திடீர் போதை பழக்கத்தால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன மஞ்சுளா, பெங்களூரில் பணிபுரியும் தனது முன்னாள் காதலரிடம் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். மஞ்சுளா தனது முன்னாள் காதலனிடம் செல்போனில் பேசுவதை அறிந்த சந்தோஷ் குமார் தினமும் மஞ்சுளாவை தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் மற்றும் மஞ்சுளாவிற்கு வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது.

Murder

ஒருகட்டத்தில் மதுபோதையில் ஆத்திரமடைந்த சந்தோஷ், மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்து பின் துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டிவிட்டு, மறுநாள் காலை காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்தோஷ்குமார் தான் செய்ததை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.