போலீசாரை பார்த்து ஓடிய நபர்.! கல்குவாரி குட்டையில் விழுந்து பலி! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

போலீசாரை பார்த்து ஓடிய நபர்.! கல்குவாரி குட்டையில் விழுந்து பலி!

சென்னை மூவரசம்பேட்டையில் போலீசுக்கு பயந்து ஓடியபோது கல்குவாரி குட்டையில் விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரும் மூவசரம்பட்டு கல்குவாரி குட்டை அருகே மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் அங்கு வருவதை பார்த்ததும் அனைவரும் தப்பியோடியுள்ளனர். அப்போது ரிஸ்வான் எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, ரிஸ்வான் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக 2 நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo