தமிழகம்

திருமணமாகி 7 மாதங்களே ஆன வாலிபருக்கு எமனாக வந்து நின்ற லாரி.! கதறி துடிக்கும் குடும்பத்தினர்.!

Summary:

திருமணமாகி 7 மாதங்களே ஆன வாலிபருக்கு எமனாக வந்து நின்ற லாரி.! கதறி துடிக்கும் குடும்பத்தினர்.!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு  ரேவதி என்ற பெண்ணுடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் வெல்டர் வேலை செய்துவந்த கார்த்திகேயன்  நேற்று வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக நேற்று மதியம் திருவையாறு நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திருவையாறு அருகே கண்டியூர் குடமுருட்டி ஆற்றுப்பாலம் பகுதியில் வந்தபோது திருவையாறில் இருந்து குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் கார்த்திகேயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திகேயன் உடலை கைப்பற்றி  பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement