
பல கனவுகளுடன் வெளிநாடு செல்வதற்க்கு காத்திருந்த வாலிபர்.! எமனாக நின்ற நாய்.! பரிதாபமாக போன உயிர்.!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். 28 வயது நிரம்பிய இவர் பொறியியல் முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பல கனவுகளுடன் இருந்த வாலிபர் செல்வராஜ் நேற்று முன்தினம் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கீரனூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மோசகுடிவிலக்கு அருகே தெருநாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் பிடித்ததில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement