தமிழகம்

இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.! தந்தை கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்த மகன்.!

Summary:

இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.! தந்தை கண் எதிரே துடிதுடித்து உயிரிழந்த மகன்.!

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் என்பவரின் மகன் ஸ்ரீதர். 21 வயது நிரம்பிய இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் சுப்புராஜின் மனைவி ரமணி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்துக்கு சென்றுவிட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்துள்ளார்.

அவரை அழைத்துச்செல்வதற்காக ஸ்ரீதர் மற்றும் சுப்புராஜ் இருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனங்களில் வீட்டில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் சேலையூர் அருகே சென்றபோது சென்னை மாநகர பேருந்து ஸ்ரீதரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீதரின் தலையில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே தந்தையின் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். இதனைப்பார்த்த சுப்புராஜ் கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர். தந்தையின் கண் எதிரேயே மகன் துடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement