இளம்பெண் தற்கொலை; ஊர்மக்களின் சந்தேகப்பார்வை: காரணம் தேடி தோண்டி துருவும் போலீசார்..!

இளம்பெண் தற்கொலை; ஊர்மக்களின் சந்தேகப்பார்வை: காரணம் தேடி தோண்டி துருவும் போலீசார்..!


young-lady-commits-suicide-by-hanging-near-rajapalayam

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், தெற்கு அண்ணா நக்ரை சேர்ந்தவர் காளிகுரு. கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (28). இந்த தம்பதியினருக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். சித்ரா அதே பகுதியிலுள்ள ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். சித்ராவின் கணவர் காளிகுரு அடிக்கடி வெளியூரில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக சித்ரா குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் அவதிபட்டுள்ளார்.

இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக சித்ரா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரம் முன்பாக  சித்ரா  தனது மகள்களை திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்து விட்டு, நேற்று சித்ரா மட்டும் தனியாக ராஜபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில்  அவரது வீடு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் வசிக்கும் சித்ராவின் தம்பி மணிகண்டன் என்பவருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த மணிகண்டன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் கதறி அழுதார். இதனை தொடர்ந்து ராஜபாலையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய காவலர்கள், சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.