கழிவறைக்குள் சென்று நீண்டநேரமாக வெளியில் வராத இளம்பெண்! கதவை உடைத்த போது காத்திருந்த பேரதிர்ச்சி!!
தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் பரிமளா தனது குழந்தைகளை அடித்துள்ளார். இதனை பார்த்த பரிமளாவின் கணவர் ரங்கநாதன் பிள்ளைகளை ஏன் அடிக்கிறாய் என திட்டியுள்ளார். இதனால் பரிமளா கோவத்தில் தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.