அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திருமணமான 3 மாதத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட இளம்பெண்.! அதிர்ச்சி காரணம்.!
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சுல்தான் என்பவர் சென்னை மண்ணடி பகுதியில் வசித்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆஜிரா என்ற இளம்பெண்ணிற்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. முகம்மது சுல்தான், அவருடைய அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், முகம்மது சுல்தானின் மனைவி ஆஜிராவுக்கும், அவருடைய அண்ணன் மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆஜிரா, வீட்டின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
4-வது மாடியில் இருந்து கீழே குதித்த ஆஜிராவுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த ஆஜிராவை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ஆஜிரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.