தமிழகம் Covid-19

கொரோனாவுக்கு தீர்வு எப்போது? நெருப்பை விழுங்கி நடுரோட்டில் அருள்வாக்கு கூறிய இளம் பெண்.! வைரல் வீடியோ.!

Summary:

Young girl says about corono end date

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 3,018,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், 207,725 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்கவும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கவும் அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே கொரோனா எப்போது சரியாகும், கொரோனோவால் இன்னும் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகிறது என்பது பற்றி சிலர் ஜோதிடம், நாடி ஜோசியம் பார்த்து கூறிவந்த நிலையியல் தற்போது அருள்வாக்கு கூறியுள்ளார் ஒரு பெண்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இளம்பெண் ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளதாக காணொளி ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த வீடியோவில் இன்னும் 7 மாதத்திற்கு மக்கள் அல்லல் பட வேண்டும் எனவும், கலியுகத்தின் ஆரம்பமே இந்த கொரோனா என்றும், நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு என பாவம் அதிகமாகிவிட்டதால் மக்கள் இந்த நோயினால் 7 மாதத்திற்கு அல்லல் படுவார்கள் அதற்கு பின்பே மருந்தும் வரும் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி வைரலாகிவரும் நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலில் தனியாக இருந்ததால் அந்த பெண் இப்படி ஆகிவிட்டார் எனவும், நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement