மெரினா கடற்கரையில் விளையாடிய சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த இளைஞன்!.



young girl raped in merina beach

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழியுடன் பெற்றோருக்கு தெரியாமல் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர்.நினைவிடம், அண்ணா நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் என பல இடங்களில் ஓடி விளையாடியுள்ளனர்.

அதனை கண்காணித்த இளைஞன் ஒருவன் சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது அறைக்கு அழைத்துச்சென்று, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும், இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமிகளை மிரட்டி இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அந்த வாலிபர், கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என்று தெரிகிறது.

                         young girl

இதனையடுத்து வீட்டிற்கு வந்த மகளின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், நடந்தவை குறித்து விசாரிக்கும் போது, சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார்..

இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.