மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய 5 மாத கர்ப்பிணியின் தலை..! இரண்டு துண்டாக வெளியே வந்து விழுந்த கொடூரம்..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய 5 மாத கர்ப்பிணியின் தலை..! இரண்டு துண்டாக வெளியே வந்து விழுந்த கொடூரம்..!

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் ஒருவரின் தலை துண்டான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கலங்கள் என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 35. கல்பனா என்ற பெண்ணை காதலித்துவந்த தர்மராஜ் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது கல்பனா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர்.  இந்நிலையில் சமீபத்தில் தர்மராஜ் வெளியே சென்றிருந்த நிலையில் கல்பனா தனி ஆளாக மரம் அறுக்கும் இயந்திரத்தில் நின்று வேலை பார்த்துவந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கல்பனாவின் தலை மரம் அறுக்கும் இயந்திரத்திற்குள் சிக்கியுள்ளது. தலை சிக்கிய அடுத்த நொடியே தலை துண்டாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் விபத்து குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo