தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
புது பெண் சாவில் மர்மம்..! அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு ஏற்பாடு..! மறைக்க முயன்ற பெற்றோர்.? காரணம் என்ன.?
திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் புது பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் பெற்றோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. தீயணைப்பு துறையில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்தி சிபிஐஎம் மாதர் சங்க தலைவியாக உள்ளார். இவர்களுக்கு செந்தாமரை என்ற 23 வயது மகள் ஒருவர் இருந்துள்ளார்.
செந்தாமரைக்கும், காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்து தனது கணவனுடன் வசித்துவந்த செந்தாமரை சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வந்த இடத்தில் செந்தாமரை பாத்ரூம் சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மேலும், மகள் உயிரிழந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல், அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ போலீசார் செந்தாமரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் செந்தாமரையின் உடலில் எந்த காயங்களும் இல்லை என கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே செந்தாமரை வேறொரு இளைஞரை காதலித்ததாகவும், அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தாமரையின் பெற்றோர் அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணத்திற்கு பிறகும் செந்தாமரை மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவரது பெற்றோர் அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
எனினும் பிரேதபரிசோதனையின் முடிவில்தான் இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.