தமிழகம்

சிவந்த கழுத்து, உடல் முழுவதும் கீறல்கள்! தனிவீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

Young girl murdered in house by lover

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயுள்ள ஆதனஞ்சேரியில் வீடு எடுத்து தங்கி வருபவர் மாநிலத்தைச் சேர்ந்த கரீனா பிரியதர்ஷினி.22 வயது நிறைந்த அவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது தோழி ரஞ்சிதா என்பவருடன் ஆதனஞ்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் தீபா வீட்டில் தங்கிய நிலையில் ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பியபோது கரீனா தூங்கிக் கொண்டிருப்பது போல படுத்துள்ளார்.  ரஞ்சிதா எவ்வளவு எழுப்பியும், குரல் கொடுத்தும் கரீனா எழவே இல்லை. அப்பொழுது அவர் அருகில் சென்று பார்த்த போது உடம்பு முழுவதும் பெரும் காயங்களும், கீறல்களும் இருந்துள்ளது. கழுத்து முழுவதும் சிவந்தும் காணப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கரீனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கரீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கரீனா மனிஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும் அவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் மாயமாகியுள்ளார். மேலும் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இந்நிலையில் அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement