வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்! வறண்டு போன ஊரணியில் சடலமாக கண்டெடுப்பு!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்! வறண்டு போன ஊரணியில் சடலமாக கண்டெடுப்பு!


young girl murder in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் என்பவரது 7வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டது சிறுமியின் உடல்.

Murder

இதனையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் தலையில் காயங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.