தமிழகம்

போலீஸ்காரரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொலை செய்த இளம்பெண்!

Summary:

Young girl killed police

சென்னை திருமுல்லைவாயல் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றி வருகிறார். இவர், ஜெயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயா  வெங்கடேஷை பிரிந்து மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். வெங்கடேஷ், தனது மகளுடன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

மேலும், இவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வெங்கடேஷிற்கு, ஆஷா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் ஆஷா அவரது கணவர் மற்றும் மகன்களை விட்டுவிட்டு வெங்கடேஷுடன் கணவன்-மனைவி போலவே வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ஆஷ, வெங்கடேஷிற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி வெங்கடேஷிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வெங்கடேஷ் மீது அதிகம் கோவம் கொண்ட அந்த பெண் நள்ளிரவில், வீட்டில் இருந்த பெட்ரோலை  தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் வெங்கடேஷின் உடல் முழுவதும் தீ பரவி அலறி துடித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, துடித்துக்கொண்டிருந்த வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இதனையடுத்து வெங்கடேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தீ வைத்த ஆஷாவை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 


Advertisement