தமிழகம்

மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மருமகள்! விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி காரணம்!

Summary:

young girl killed mother in law

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள மணியம் பள்ளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், ஆசிரியர் பயிற்சி முடித்த பிரதீபா எனும் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. 

இந்தநிலையில், பிரதீபாவிற்கும் அவரது மாமியார் ராஜம்பாளுக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை நடைபெற்ற வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருமகளிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 
  
இந்தநிலையில், நேற்று மதியம் 100 நாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டிருந்தார் ராஜம்பாள்.  தூங்கிக்கொண்டிருந்த மாமியார் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி பிரதீபா, தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


  
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து ராஜம்பாள் உயிரிழந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ராஜம்பாளின் மருமகள் பிரதீபா மற்றவர்களுக்கு சந்தேகம் வரும்படி நடந்து கொண்டதால், 9 மாத கைக்குழந்தையுடன் இருந்த் பிரதீபாவை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், வரதட்சணைக் கேட்டு மாமியார் ராஜாம்பாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல்  தனக்கு இடையூறு செய்ததாகவும் அதனால் தனது மாமியாரைக் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் பிரதீபா கூறியுள்ளார். மாமியாரை மருமகள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement