கல்லூரி மாணவியை கடத்தி காரில் வைத்து தாலிகட்டிய வாலிபர்,.. துரத்திப்பிடித்து கைது செய்த போலீசார்..!

கல்லூரி மாணவியை கடத்தி காரில் வைத்து தாலிகட்டிய வாலிபர்,.. துரத்திப்பிடித்து கைது செய்த போலீசார்..!


young-girl-kidnapped-and-married-by-youth-at-erode

ஈரோடு மாவட்டம் பெங்களூரு அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலிகட்டிய வாலிபர் உட்பட மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 19 வயது மகள்  இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நிச்சாம்பாளையம் காலனியை சேர்ந்த தேவராஜ் (32) தமிழரசன் (24) நிச்சாம்பாளயம் ராஜன் நகரைச் சேர்ந்த ராஜு என்கின்ற சஞ்சான் (35), ஆகிய மூன்று பேரும் காரில் வந்து பஸ் நிருத்ததில் நின்றிருந்த மாணவியை மூன்று பேரும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.மாணவி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார் ஆனால் கார் மிக வேகமாக சென்றுள்ளது. 

பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் இதை பார்த்து உடனே திங்களூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் காருக்குள் இருந்தபடியே தேவராஜ் மாணவியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். உடனே மாணவி  அந்த தாலியை கழற்றி வெளியே வீசியுள்ளார்.

இதற்கிடையே தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அனைத்து பகுதி காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தார்கள் இந்நிலையில் கவுந்தம்பாடி திங்களூர் ரோட்டில் நிச்சாம்பாளையம் அண்ணா நகர் அருகே மாணவி கடத்தப்பட்ட காரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் காருடன் மாணவியை கடத்திய மூன்று பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் தேவராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அவருடைய மனைவி இறந்து விட்டார் என்றும், கடத்தப்பட்ட மாணவி மீது ஒருதலைக்காதல் கொண்டு அவரை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் தமிழரசன் ராஜு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.