காதலியுடன் உல்லாசமாக இருக்கும்போது உயிரிழந்தார் என கூறும் இளைஞன்!. அதனை முற்றிலும் மறுக்கும் பெண்ணின் குடும்பத்தார்!.



young girl died while enjoy with her boy friend


புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தில் வசித்து வருபவர் கஸ்தூரி. 19 வயது நிறைந்த இவர்  நர்சிங் படித்துள்ளார்.மேலும்  இவர் ஆலங்குடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும், ஆலங்குடி அருகே அதிரான்விடுதி கிராமத்தை டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநராக இருந்த  நாகராஜன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் தைலமர காட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.அந்நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கஸ்தூரி உயிரிழந்துள்ளார்.

lovers

மேலும் நாகராஜன் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் இருவரும் நீண்டநாட்களாக காதலித்துவந்தோம், இதுபோன்று பலமுறை இருவரும் தனிமையில் இருந்துள்ளோம். காதலி திடீர் மரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன் என கூறினார்.

மேலும்  இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன், கஸ்தூரியின் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றின் பாலத்தின் அடியில் போட்டுவிட்டு சென்றேன் என கூறியுள்ளார்.

lovers

இதுகுறித்து கஸ்தூரியின் குடும்பத்தார் கூறுகையில், கஸ்தூரியைத் தனிநபராக கொலை செய்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்று மல்லிப்பட்டினம் ஆற்றில் விட்டு வர வாய்ப்பு இல்லை. இது கூட்டாக சேர்ந்து செய்த சதி என்றும் கூறுகின்றனர்.

கஸ்தூரியின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.