கடைக்கு சென்ற 3 சிறுமிகள்.. தண்ணீரில் கால் பட்டவுடனே தூக்கிவீசப்பட்ட சிறுமி.! பரிதாபமாக போன உயிர்.! துயரச்சம்பவம்.!

கடைக்கு சென்ற 3 சிறுமிகள்.. தண்ணீரில் கால் பட்டவுடனே தூக்கிவீசப்பட்ட சிறுமி.! பரிதாபமாக போன உயிர்.! துயரச்சம்பவம்.!



young girl died in electric shock

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை கரையை கடந்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.  பல இடங்களில் நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சிட்டிபாபு என்பவரின் வீட்டின் உள்ளே வெள்ளம் புகுந்துள்ளது. இதனையடுத்து அவரது 2 மகள்களையும்அவரது சகோதரி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை சிட்டிபாபுவின் மகள் உட்பட  3 சிறுமிகள் அருகில் உள்ள கடைக்கு சென்றனர். 

அப்போது நீண்டநேரமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் திடீரென இயக்கப்பட்டது. அப்போது அங்குள்ள மின்சார பெட்டியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து இருந்தால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. அந்த மழைநீரில் மாணவி சிட்டிபாபுவின் இளைய மகள் கமலி அந்த தண்ணீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு . உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனையடுத்து இங்கிருந்த இளைஞர்கள் மற்ற 2 சிறுமிகளையும் தண்ணீரில் இருந்து உடனடியாக மேலே தூக்கினர். பின்னர் மின்சாரம் தாக்கிய சிறுமி காமாலையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.