கண்கலங்கவைக்கும் சம்பவம்.. அம்மா!! தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண் எழுதிவைத்த உருக்கமான கடிதம்.. கதறும் பெற்றோர்..

கண்கலங்கவைக்கும் சம்பவம்.. அம்மா!! தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண் எழுதிவைத்த உருக்கமான கடிதம்.. கதறும் பெற்றோர்..


Young girl commit suicide over dowry issue

திருமணம் முடிந்து 5 மாதத்தில் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(28). இவருக்கும் சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ(19) என்ற பெண்ணிற்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்து ஜோதிஸ்ரீயின் மாமியார் அவரிடம் கூடுதல் வரதட்சணை வாங்கிவருமாறு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் இரண்டு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை வர, தனது மனைவியை கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாக விட்டுவிட்டு பாலமுருகன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது பெற்றோருடன் வசித்துவந்த ஜோதிஸ்ரீ சம்பவத்தன்று தனது சான்றிதழ்கள் மற்றும் துணிகளை எடுப்பதற்காக திருமுல்லைவாயலில் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை வீட்டிற்குள் விடாமல் மாமியார் தடுத்துள்ளார். இருப்பினும் அவரது எதிர்ப்பை மீறி ஜோதிஸ்ரீ வீட்டிற்குள் சென்று, தனது அறையில் இருந்த சான்றிதழ்கள் மற்றும் துணிகளை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது ஜோதிஸ்ரீயின் மாமியார் அம்சா, அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் மேலும் மனவேதனை அடைந்த ஜோதிஸ்ரீ அதே அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோதிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த அறையில் ஜோதிஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், "நகை, பணத்துக்கு ஆசைப்படும் நபருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா?. பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார். எல்லாவற்றையும் நான் சொல்ல முடியவில்லை. நான் போகிறேன். எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவரும், மாமியாரும்தான். அவர்களை சும்மா விடாதீர்கள்". என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உயிரிழந்த ஜோதிஸ்ரீயின் கணவர் மற்றும் மாமியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.