தமிழகம்

27 வயது இளம் பெண்.. இன்று திருமண நிச்சயதார்த்தம்.. வெளியில் சென்று வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Summary:

தென்காசியில் இளம் பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயம் நடைபெற இருந்த நிலையில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் இளம் பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயம் நடைபெற இருந்த நிலையில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே காளத்திமடம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கணேசன் என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். கணேசனுக்கு 27 வயதில் எம்.ஏ. படித்துள்ள புனிதா என்ற மகள் இருந்தார். புனிதாவுக்கு இன்று காலை திருமண நிச்சயதார்த்தம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை புனிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளன்னர். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் புனிதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அந்த பகுதி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் புனிதாவின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
 


Advertisement