குத்தி குத்தி பேசிய குடும்பம்.. உதாசினப்படுத்திய கணவன்.. தாங்க முடியாமல் தூக்கில் தொங்கிய இளம் பெண்..young-girl-commit-suicide-near-nagarcovil

கணவன் வீட்டில் கொடுமை படுத்தியதால் இளம் பெண் ஓர்வுற தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன். 28 வயதாகும் நாகராஜானுக்கு அதே பகுதியை சேர்ந்த ஷிவானி (22) என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின்போது பெண்ணின் பெற்றோர் 95 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தநிலையில், ஷிவானி சமீபத்தில் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால் உருவான கர்ப்பம் ஏதோ சில காரணங்களால் கலைந்துபோக, அதற்கு நீதான் காரணம் என நாகராஜன் குடும்பத்தினர் அடிக்கடி அவரை குத்திக்காட்டி பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

அதுபோக, சம்பவத்தன்று ஷிவானி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்த நாகராஜன், சிவானியின் சமையல் சரியில்லை என கூறி, அவருடன் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஏற்கனவே மனவேதனையில் இருந்த ஷிவானி, இந்த சம்பவத்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானநிலையில் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அடுத்து அறைக்குள் சென்ற ஷிவானி நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால்  குடும்பத்தினர் அறைக்கதவை தட்டி பார்த்துள்ளனர். எந்த பதிலும் இல்லை என்பதால் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது ஷிவானி சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தபோது, அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கள் மகளை அடித்து கொடுமை படுத்தியதே அவரது தற்கொலைக்கு காரணம் என சிவானியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.