ஒன்றரை வருட திருமண வாழ்க்கை.! 9 மாதம் கர்ப்பம்.! படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய இளம் பெண்..! அதிர வைக்கும் காரணம்!young-girl-commit-suicide-near-chennai

சென்னை புறநகர் பகுதியான புழல் லட்சுமி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்  ஜெகன் செல்வராஜ். இவரது மனைவி சரண்யா. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில்  தற்போது சரண்யா 9 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஜெகன் தன்னுடைய வேலையை இழந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்றும் கணவன் மனைவி இடையே வேலை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் சண்டை போட்ட செல்வராஜ் ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் சரண்யாவை கோபமாக திட்டிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். கணவன் சண்டை போட்டதை அடுத்து மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சரண்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பிய செல்வராஜ் தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இதுகுறித்து வழங்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.