தமிழகம்

11 மாத பிஞ்சு குழந்தையை விட்டுட்டு போக உனக்கு எப்படிம்மா மனசு வந்துச்சு!! குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..

Summary:

திருவள்ளூர் மாவட்டம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ச

திருவள்ளூர் மாவட்டம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நம்பாக்கம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(26). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பக்தய்யன் என்பவரின் மகள் மோனிஷா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு விச்சிகா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன்பு இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் வினோத் குடித்துவிட்டு தனது மனைவி மோனிஷாவை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பென்னலூர்பேட்டை போலீசார் உயிரிழந்த மோனிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோனிஷாவின் கணவர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement