பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்..! உடெம்பெலாம் தீயோடு அலறிய நீலவேணி..! திருமணம் முடிந்த 8 மாதத்தில் நடந்த சோகம்.!
திருமணம் முடிந்த 8 மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(25). ஓட்டுநராக வேலை பார்த்துவரும் இவருக்கும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது.
தனது கணவன் குடும்பத்துடன் வசித்துவந்த நீலவேணி நேற்று காலை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ பற்றியதும் நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனின்றி நீலவேணி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீலவேணியின் கணவர் விஷ்ணுவிடம் நடத்திய விசாரணையில், நீலவேணியை திருமணம் செய்வதற்கு முன்பே விஷ்ணு வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும், இந்த விவகாரம் நீலவேணிக்கு தெரியவர, முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்தது குறித்து கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வருவதும் தெரியவந்துள்ளது.
நேற்று காலையும் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்தான் நீலவேணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.