தமிழகம்

இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதுக்கு முன்னாடி..? முதல் இரவு அறைக்குள் டார்ச்சர் செய்த கணவன்..! 8 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட மணப்பெண்..!

Summary:

Young girl commit suicide after 8 days of marriage

கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் முடிந்த 8 நாட்களில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மகள் சந்திரலேகா. இவருக்கும் காட்பாடி பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பெற்றோர்களால் நிச்சக்கைப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதனை அடுத்து திருமணம் முடிந்து அன்று இரவு பாலாஜி, சந்திரலேகா இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு நடைபெற்றுள்ளது. பல்வேறு ஆசை, கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சந்த்ரலேகாவிற்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

பாலாஜி தன் மனைவியிடம் நீ இவ்வளவு அழகாக இருக்கின்றாயே இதற்கு முன் யாரையும் காதலித்து இல்லையா? கற்புடன் தான் இருக்கிறாயா? என பல்வேறு கேள்விகளை கேட்டு சந்திரலேகாவை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களுக்கு பிறகு சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் திருமணத்தில் பங்கேற்க முடியாத நிலையில் சந்திரலேகாவின் வீட்டிற்குச் சென்று சந்திரலேகா மற்றும் அவரது கணவர் பாலாஜி இருவருக்கும் தந்து திருமண வாழ்த்துக்களை கூறியதோடு சந்திரலேகாவின் குணநலன்களை பாராட்டி புகழ்ந்துள்ளார். 

இதனைக் கேட்டு மேலும் சந்தேகம் அடைந்த பாலாஜி மனைவியின் ஆண் நண்பர் வீட்டில் இருந்து சென்ற பிறகு அவரையும் சந்திரலேகாவையும் சேர்த்து வைத்து தவறாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் மேலும் மனமுடைந்த சந்திரலேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் தனது மன கஷ்டங்களை கடிதமாக எழுதி வைத்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மேலும் தான் எழுதிய கடிதத்தில் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்யும்போது நன்கு விசாரித்து, நல்ல மாப்பிள்ளையாக பார்க்குமாறு தனது பெற்றோர்களுக்கும்  அறிவுரை கூறியுள்ளார் சந்திரலேகா. 

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சந்திரலேகாவின் கணவர் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் நடந்த எட்டு நாட்களில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்திலும் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement