தமிழகம் Covid-19

என் அம்மாவுக்காக நான் காத்திருக்கிறேன்..! நீங்கள் உங்கள் வீடுகளிலையே இருந்து உதவ முடியுமா.? சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்..!

Summary:

Young girl asked to stay home to meet her mom who treat corono

நான் என் அம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தயவுசெய்து வீடுகளிலேயே இருந்து உதவ முடியுமா? என் மருத்துவர் ஒருவரின் 9 வயது மகள் தனது கைகளில் ஏந்தியுள்ள பதாகைப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும், பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க மருத்துவர்களும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி அம்ருதா (9) என்பவர் தனது கைகளில் பதாகை ஒன்றை ஏந்தியவாறு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'என் அம்மா ஒரு மருத்துவர். உங்களுக்கு உதவுவதற்காக என் அம்மா என்னை விட்டு பிரிந்து உள்ளார். நீங்கள் தயவுசெய்து வீடுகளிலேயே இருந்து உதவ முடியுமா? நான் என் அம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறேன். வீடுகளில் இருங்கள், நாட்டை காப்போம்' என்ற வரிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

அம்ருதாவின் தாயார் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். கொரோனவுக்காக தங்கள் உறவுகளை பிரிந்து, உயிரை பணயம் வைத்து சேவையாற்றிவரும் மருத்துவர்களின் நிலையும், தாயை பிரிந்த மகளின் பாசத்தையும் வெளிப்படுத்தும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement