தமிழகம்

சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்! போலீசாரின் அதிரடி!

Summary:

young girl abused

வீட்டு வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி சென்னை அடையாறு இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு குடிநீர் கேன் போடுவதற்காக வந்த சதீஷ்குமார் என்பவர் அந்த சிறுமியை திருமண ஆசைகாட்டி வீட்டை விட்டு அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சதீஷ்குமார் சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவரது நண்பர்களான நண்பர்கள் வினோத், ராஜா ஆகியோருடன் சேர்ந்து சதீஷ்குமார் அந்த சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த சிறுமியின் உறவினர் சிறுமி காணாமல் போய்விட்டதாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். 

இந்தநிலையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
 


Advertisement