8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.!

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! அதிர்ச்சியடைந்த பெற்றோர்.!


young-girl-abused-37ZFKG

நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று காலை கோயிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற சிறுமி, இரவு வரை வீடு திரும்பவில்லை. பின்னர் இரவு வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நண்பர்கள் வீட்டில் இருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை லோகேஷ் என்பவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் தன்னை லோகேஷ் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த சிறுமி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.