தமிழகம்

தாலியில் ஈரம் கூட காயல.. திருமணம் முடிந்த 3 மாதத்தில் பெண் மருத்துவர் உயிரிழப்பு..! கதறும் உறவினர்கள்..

Summary:

திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும

திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் விக்னேஷுக்கும் அதே அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இருவரும் தங்கள் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், ஹரிணிக்கு கடந்த ஐந்தாம் தேதி திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தபடியே ஹரிணி சிகிச்சை மேற்கொடுவந்ததோடு, வலிநிவாரணி ஊசி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரது உடல் மிகவும் மோசமடைந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். மேலும் ஹரிணிக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக ஏதேனும் தவறு நடந்ததா என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement